ரொறன்றோ பொலிஸாரால் காணாமற்போன 10 வயது சிறுவன் கண்டுபிடிப்பு!

Report

ரொறன்ரோவில் காணாமற்போன 10 வயது சிறுவனை கண்டுபிடித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்று அஇரவு வெஸ்டன் வீதி மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த தினம் மதியம் காணாமற்போனதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சிறுவனின் படத்தை பொலிஸார் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை கோரியிருந்தனர்.

இதனை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் அடிப்படையில் சிறுவன் இரவு 10 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

1717 total views