கனடாவில் தனது குழந்தை கொலை வழக்கில் தாய்க்கு ஜாமீன்!

Report

கனடாவின் வின்ட்சர்ட் பகுதியில் தனது கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, 27-வயது பெண்ணுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண் $ 25,000 தொகையில் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம், கனடாவின் மெக்கே தெருவின் 100 தொகுதி கடந்த ஜூன் 8-அன்று இடம்பெற்றிருந்த நிலையில், இதில் சிக்கி இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில், இரண்டாவது குழந்தை உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவரது முதல் குழந்தை ஜூலை 2-அன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், வழக்கு விசாரணைக்காக ஜூலை 17-அன்று குழந்தையின் தந்தை நீதிமன்றத்தில் தோன்ற இருக்கிறார்.

2163 total views