கனடாவில் பெண் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் கைது!

Report

கனடாவின் மோய் அவென்யூ பகுதியில் பெண் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான குறித்த கொலை சம்பவம், கனடாவின் மோய் அவென்யூவின் 600 தொகுதியில் கடந்த வாரம் அதிகாலை வேளையில் சம்பவித்துள்ளது.

மேலும், இது குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 519-255-6700 ext. 4830, Crime Stoppers anonymously at 519-258-8477 (TIPS), அல்லது online at www.catchcrooks.com என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டின் நான்காவது கொலை சம்பவம் ஆகும். முதலாவதாக 64- வயதுடைய பெண் கொலை வழக்கில் 33 -வயதுடைய (Alexander Mackenzie) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது, குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் 27- வயதுடைய பெண் மற்றும் 28- வயதுடைய ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, 63 வயதுடைய Gerardine Butterfield, நபர் கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், இது தொடர்பில் முக்கிய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது.

1373 total views