20 வருடங்களுக்கு முன் கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை சிறுமி! தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் பின்னணி..

Report

கனடாவில் இலங்கையரான ஷர்மினி ஆனந்தவேல் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பொலிஸாரால் உண்மையான குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.

இலங்கையில் உள்நாட்டு போர் காலத்தில், கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஷர்மினி ஆனந்தவேல் குடும்பத்தினர்.

அப்போது வெறும் 15 வயதேயான ஷர்மினி ஆனந்தவேல், கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம், புதிதாக வேலையில் சேர்வதற்காக வடக்கு ரொறன்ரோவில் உள்ள தங்களது குடியிருப்பில் இருந்து கிளம்பியுள்ளார்.

ஆனால் சுமார் நான்கு மாதங்களுக்கு பின்னர், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷர்மினி ஆனந்தவேலின் எலும்புகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது.

சம்பவம் நடந்து 20 ஆண்டுகாளியும், இதுவரை ஷர்மின்யின் மர்ம மரணம் தொடர்பில் கனேடிய பொலிஸாரால் எவர் மீதும் வழக்குப் ப்திய முடியவில்லை என கூறப்படுகிறது.

ஆனால், சம்பவம் நடந்த அன்றே பொலிஸாருக்கு, ஷர்மினியின் அயலாரான 23 வயது இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும்,

அவரை அழைத்து விசாரித்ததாகவும், அவர் தொடர்புடைய நபர்களை விசாரித்ததாகவும் கூறும் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில், தற்போதும் அவரை விசாரணை கைதியாக சிறையில் அடைத்துள்ளது.

ஆனால் ஷர்மினியின் கொலை வழக்கு தொடர்பாக இல்லை என கூறப்படுகிறது. ஷர்மினி தமது இரு சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் ரொறன்ரோவில் உள்ள Don Mills பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.

அவரை அழைத்து விசாரித்ததாகவும், அவர் தொடர்புடைய நபர்களை விசாரித்ததாகவும் கூறும் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில், தற்போதும் அவரை விசாரணை கைதியாக சிறையில் அடைத்துள்ளது.

ஆனால் ஷர்மினியின் கொலை வழக்கு தொடர்பாக இல்லை என கூறப்படுகிறது. ஷர்மினி தமது இரு சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் ரொறன்ரோவில் உள்ள Don Mills பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.

ஷர்மினி மாயமான தகவல் பொலிஸாருக்கு புகாராக கிடைத்ததும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது மட்டுமின்றி, தன்னார்வலர் பலர் இந்த வழக்கு தொடர்பில் களமிறங்கினர்.

இந்த நிலையிலேயே பொலிஸாரின் கவனம் ஷர்மினியின் அதே குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கும் Stanley Tippett மீது திரும்பியது.

Stanley Tippett தமது 16-வது வயதில் பாடசாலையில் ஆசிரியரின் மேஜைக்கு நெருப்பு வைத்த வழக்கில் பொலிஸாரிடம் சிக்கியவர்.

மட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு வழக்கில் பொலிஸார் அவரை விசாரணை செய்தும் வந்துள்ளனர்.

ஷர்மினியின் சிதைந்த உடல் பாகங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்ட பின்னரும், குற்றவாளியின் டி.என்.ஏ எதையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே, ஷர்மினி விவகாரம் தொடர்பில் Stanley Tippett இடம் பொலிஸார் பலமுறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணை அதிகாரிகளில் ஒருவரின் கருத்துப்படி, ஷர்மினி தமக்கும் Stanley Tippett-கும் இடையே இருந்த அந்த மர்மமான உறவு குறித்து இதுவரை எவரிடமும் விவாதித்ததில்லை.

மட்டுமின்றி, வேலை வாங்கித் தருவதாக கூறி, ஷர்மினியை Stanley Tippett பயன்படுத்தி இருக்கலாம் எனவும் அவர் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷர்மினியின் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்ட வேலை உறுதி கடிதமானது ஸ்டான்லி வழங்கிய போலி நிறுவனத்தின் கடிதம் எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் ஷர்மினியை ஸ்டான்லி கொலை செய்தாரா என்பது தொடர்பில் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அந்த பொலிஸ் அதிகாரியின் சந்தேகங்கள் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

19896 total views