ரொறன்ரோ வீடுகளில் இருந்த ஆயுதம் மற்றும் போதைப் பொருள் -நால்வர் கைது

Report

ரொறன்ரோ வீதியிலுள்ள இரு வீடுகளில் இருந்து ஆயுதம், மெத் போதைப் பொருள் மற்றும் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெஸ்ட் எண்ட்டில் உள்ள குறித்த வீடுகளை சோதனை செய்த வின்னிபெக் பொலிஸார், நேற்று முன் தினம் சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், வெட்டுக் கத்தி, மெத் போதைப் பொருள் மற்றும் 4000 டொலர்கள் ரொக்கப்பணம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 4,200 டொலர்கள் மதிப்புள்ள சுமார் 200 கிராம் மெத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 46 மற்றும் 45 வயதுடைய இரண்டு ஆண்கள், 20 வயது பெண் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரையும் , பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் கைதான 45 வயதானவர் மீது துப்பாக்கியால் சுடும் பல குற்றச்சாட்டுகளும், 20 வயதான பெண் மீது துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டும், 46 வயதானவர் மீது ஒரு தடை உத்தரவுக்கு முரணான ஆயுதத்தை வைத்திருந்ததாக ஐந்து குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

மூன்று பெரியவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , இதுதொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1733 total views