கனடாவில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த நால்வருக்கு நேர்ந்த கதி!

Report

கனடாவின் ரொறன்ரோ வீதியிலுள்ள இரண்டு வீடுகளில் இருந்து ஆயுதம், மெத் போதைப் பொருள் மற்றும் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெஸ்ட் எண்ட்டில் உள்ள இரண்டு வீடுகளை சோதனை செய்த வின்னிபெக் பொலிஸார், நேற்று முன் தினம் நால்வரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், வெட்டுக் கத்தி, மெத் போதைப் பொருள் மற்றும் 4000 டொலர்கள் ரொக்கப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 4,200 டொலர்கள் மதிப்புள்ள சுமார் 200 கிராம் மெத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 46 மற்றும் 45 வயதுடைய இரண்டு ஆண்கள், 20 வயது பெண் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதானவர் மீது துப்பாக்கியால் சுடும் பல குற்றச்சாட்டுகளும், 20 வயதான பெண் மீது துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டும், 46 வயதானவர் மீது ஒரு தடை உத்தரவுக்கு முரணான ஆயுதத்தை வைத்திருந்ததாக ஐந்து குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

மூன்று பெரியவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

335 total views