கனடாவில் மாயமான தமிழ் இளைஞரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Report

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கனடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மார்க்கம் பகுதியை சேர்ந்த 24 வயதான பானெந்தன் குனபாலசிங்கம் (Banenthan Gunabalasinkam) என்பவரே காணாமல் போயுள்ளார்.

நேற்று முன்தினம் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களிடம் யோர்க் பிராந்திய பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

குறித்த இளைஞன் மார்க்கம் பகுதியிலிருந்து இருந்து Mark ville Mall நோக்கி நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் பேருந்தில் பயணம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இளைஞன் தொடர்பான தகவல் தெரித்தால் 866-876-5423, ext.7541 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுள்ளனர்.

2297 total views