கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

Report

கனடாவில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஔிப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

மேற்கு ரொறென்ரோவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றுள்ளது. அங்கு திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்ட நிலையில் கண்காணிப்பு பணியில் இருந்த பொலிஸார் சென்று அவதானித்துள்ளனர்.

அப்போது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் படுகாயங்களுடன் கிரைக் கேம்பெல் (வயது 42) என்ற ஆண் வீதியில் வீழ்ந்து கிடந்தார்.

இதையடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் இருந்து சில ஆதாரங்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கருவிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தாலோ அல்லது காணொளி ஆதாரங்களை வைத்திருந்தாலோ தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

6003 total views