கனடாவில் 19 வயது இளைஞன் கொலை விவகாரம் தொடர்பாக இருவர் கைது!

Report

கனடாவின் மனிடோபாவில் 19 வயது டார்லியஸ் மெக்கே சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, இருவரை வின்னிபெக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சால்டர் மற்றும் ஐகின்ஸ் வீதிகளுக்கு இடையில் பாய்ட் அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து 37 வயதான டெரெக் டொனால்ட் பிராங்ளின் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 26 வயதான கிறிஸ்டோபர் டகோட்டா முர்டாக் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாவும், அவர் மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் ஒரு தடை உத்தரவுக்கு மாறாக ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இருவரும் தற்போது, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வின்னிபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெக்கேயின் மரணம் இந்த ஆண்டு வின்னிபெக்கில் இடம்பெற்ற 30ஆவது படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மெக்கென்சி மற்றும் மெக்ரிகோர் வீதிகளுக்கு இடையில், பிரிட்சார்ட் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டின் முன் முற்றத்தில் டார்லியஸ் மெக்கே சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேக நபர்கள் மற்றும் மெக்கே ஆகியோர் வாய்மொழி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலேயே, இந்த கொலை இடம்பெற்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

1120 total views