தாயின் அஸ்தியில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கனேடிய பெண்.!

Report

கனடாவின் ஆல்பர்ட்டாவில், ஒரு பெண்ணின் தாயுடைய அஸ்தி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டதையடுத்து, இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனம் ஒன்றின் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆல்பர்ட்டாவில் வசிக்கும் Anna-May Woodley தனது தாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பிறகு தற்செயலாக அந்த அஸ்தி வைக்கப்பட்டிருந்த பெட்டியின் அடியில் பார்க்கும்போது, அதில் Phyllis Goodyear என்ற பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் Anna. காரணம் அது அவருடைய தாயின் பெயர் அல்ல.

அது Jana Semeniuk என்னும் பெண்ணின் தாயுடைய அஸ்தி என்பது பின்னர் தெரியவந்தது. விவரம் Janaவுக்கு தெரிவிக்கப்பட, கோபத்தில், அந்த இறுதிச்சடங்கு செய்யும் நிறுவனத்தில் சென்று அவர் விசாரித்தபோது, மனிதத் தவறுதான் அதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், மொத்தத்தில் இந்த அமைப்பிலேயே தவறு உள்ளது என்று கருதுகிறார் Jana. எனவே, Alberta Funeral Services Regulatory Board (AFSRB)இல் புகார் ஒன்றை அளித்துள்ளார் Jana.

ஒருவருடைய அன்பிற்குரியவர்களை இழந்து சோகத்திலிருக்கும் நிலையில், அவரது அஸ்தியும் வேறு யாரிடமோ கொடுக்கப்பட்டுவிட்டது என்றால், அது எவ்வளவு வேதனையை அளிப்பதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பும் Jana, இந்த நடைமுறைகள் சரி செய்யப்படவேண்டும், இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனங்களில் பணி செய்வோர் இன்னும் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்.

இதற்கிடையில், Janaவின் தாயின் அஸ்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அத்துடன், Anna தன் தாயின் அஸ்தியை சேகரிப்பதற்காக கொடுத்த அஸ்திக்கலசமும் பத்திரமாக இருந்ததைக் கண்டு அதை அவரிடம் ஒப்படைத்துள்ளார் இறுதிச் சடங்கு நிறுவன ஊழியர் ஒருவர்.

10517 total views