ஒன்ராறியோவில் 15000 பேரை இழக்க நேரிடலாம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை

Report

கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸால் 15 ஆயிரம் பேரை இழக்க நேரிடலாம் என ஒன்ராறியோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தீவிர நடவடிக்கைகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன எனவும் குறிப்பிட்டனர்.

சமீபத்திய வாரங்களில் ஒன்ராறியோ, அனைத்து மாகாணங்களையும் போலவே அத்தியாவசியமற்ற வணிகங்கள், பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் பூங்காக்களை மூடியுள்ளது.

ஆனால் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது பொது சுகாதார அதிகாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரை 12 ஆயிரத்து 549 ஆகப் பதிவாகியுள்ள அதேவேளை, நேற்று மட்டும் ஆயிரத்து 92 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது.

அத்துடன், நேற்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 208 ஆக அதிகரித்துள்ளதுடன் 2 ஆயிரத்து 186 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

கியூபெக், ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2697 total views