கனடாவில் விடுதலையாகும் மோசமான செயலில் ஈடுபட்டு சிறை சென்ற இளைஞன்... பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

Report

கனடாவின் Vancouver நகரில் அதிக ஆபத்துள்ள பாலியல் குற்றவாளி வசிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Howard Geddes Skelding (28) என்ற இளைஞன் பாலியல் வன்கொடுமை மற்றும் அநாகரீக செயல்களுக்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை சமீபத்தில் தான் அனுபவித்து முடித்துள்ளார்.

பொலிசார் கூறுகையில், அவர் பெண்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் நபராக இருந்துள்ளார்.

குறிப்பாக அவர் போதைப்பொருளைப் பயன்படுத்தினால் அது பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

பல்வேறு நிபந்தனைகளுடன் தான் Howard, Vancouver நகரில் வசிக்க வேண்டும், அதிலும் முக்கியமாக துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள், கத்திகள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதியில்லை.

மேலும் அவர் தனக்கு வழங்கப்படும் ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சைகளை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்,

அப்படி Howard நிபந்தனைகளை மீறுவதை யாராவது கண்டால் உடனடியாக 911 என்ற எண்ணுக்கு அழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறியுள்ளனர்.

7875 total views