மொன்றியலில் கொலை முயற்சி- தீவிர விசாரணையில் பொலிஸார்

Report

மொன்றியல் லிட்டில் பர்கண்டி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மொன்றியல் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொன்றியலில் இடம்பெற்ற இந்த கொலை முயற்சியில் 13 வயது சிறுவன் ஒருவரும் மற்ற இரண்டு பேரும் சுடப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளானர்.

இது தொடர்பில் “பொலிசார் வந்தபோது, 25 வயது இளைஞர் சுடப்பட்டதை கண்டுபிடித்தனர்” என எஸ்பிவிஎம் செய்தித் தொடர்பாளர் அதிகாரி ஜீன்-பியர் பிரபாண்ட் கூறினார்.

மேலும் சுடப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2844 total views