காணாமல் போன ஒன்றாரியோ சிறுவன் கண்டுபிடிப்பு

Report

அம்பர் எச்சரிக்கையைத் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆறு வயது ஒன்றாரியோ சிறுவன் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

சிறுவன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நயாகரா பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் தனது 44 வயது தந்தையுடன் இருந்ததாகவும், கடைசியாக ஒன்றாரியோவின் ஹாமில்டனில் காலை 9 மணியளவில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் அம்பர் விழிப்பூட்டலை அறிந்த பின்னர் ஒரு சந்தேக நபர் திரும்பி வந்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் கூறியுள்ளனர்.

2287 total views