கனடாவின் இந்த இரு மாநிலங்களில் ஒரு மாதமாக எவருக்கும் கொரோனா தொற்று இல்லை!

Report

கடந்த ஒரு மாதகாலமாக கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரோடர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று புதிய நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்பட்டவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாகாணத்தில் இருந்தியாக அறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளி மே 28 அன்று அடையாளம் காணப்பட்டார் என்றும் அவர் நாட்டிற்கு வெளியில் இருந்து பயணம் செய்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 நாட்களுக்கு மேல் நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரோடரில் கொரோனா வைகோரஸ் தொற்று உறுதியான ஒரே ஒரு நோயாளி மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாகாண அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பின் படி, மாகாணத்தின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 261 ஆக உள்ளது.

அத்துடன் , 258 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர் என்றும் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10356 total views