கனடாவில் காணாமல் போயுள்ள பெண் குறித்து பொலிசார் புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்!

Report

கனடாவில் காணாமல் போயுள்ள பெண் குறித்து பொலிசார் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 45 வயதான Angelina Raviele என்ற பெண் காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.

Angelina Raviele கடைசியாக 28ஆம் திகதி சனிக்கிழமை Keele St and Eglinton Av W பகுதியில் காணப்பட்டுள்ளார்.

5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட Angelina சிறிது உடல் பருமனாக இருப்பார் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல் போன அன்று Angelina ஊதா நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

11215 total views