கனடா பிரதமர் வீட்டு கதவில் மோதி உள்ளே நுழைந்தவர் இவர்தான்! வெளியான புகைப்படம்

Report

கனடா பிரதமர் வீட்டு காம்பவுண்ட் கதவில் ட்ரக்கைக் கொண்டு மோதி உடைத்து உள்ளே நுழைந்தவரது படமும் அவரைக் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் காலை, வேகமாக வந்த ட்ரக் ஒன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கவர்னர் ஜெனரல் வசிக்கும் காம்பவுண்டு கதவில் மோதி உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது.

இதன்போது காரிலிருந்து நீண்ட துப்பாக்கி ஒன்றுடன் வெளியேறிய நபர் 13 நிமிடங்கள் அந்த காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றியுள்ளார்.

அதன் பின்னர், அவர் அங்கிருந்த ரோஜா தோட்டம் ஒன்றிற்குள் சென்று பதுங்கியுள்ளார். அவருடன் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியபின் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவரது பெயர் Corey Hurren என்றும், அவர் கனடா ராணுவ பிரிவு ஒன்றில் பணியாற்றுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவரது காரில் பல ஆயுதங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள Hurren மீது பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த சம்பவம் நடந்தபோது ட்ரூடோவும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை. அதன் பின்னர் தகவலறிந்த ட்ரூடோ, யாரோ ஒருவர் உங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் என்ற விடயத்தைக் கேட்க யாருமே விரும்பமாட்டார்கள்தான்.

இருந்தாலும், யாருக்கும் எந்த காயங்களுமின்றி சூழ்நிலையைக் கையாண்ட கனேடிய மற்றும் ஒட்டாவா பொலிசாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

16496 total views