கனடாவில் கும்பலாக நின்றிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்! இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Report

கனடாவில் ஷாப்பிங் பிளாசா பார்கிங்கில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரில் வந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொரன்ரோவில் உள்ள shopping plaza-வில் உள்ள பார்க்கிங்கில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 10 மணிக்கு பலர் நின்றிருந்தனர்.

அப்போது காரில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இதில் ஐந்து பேர் மீது குண்டு பாய்ந்தது, அதில் Mohamed Sow (20) படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தங்களிடம் வந்து அது குறித்து கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

8010 total views