கனடாவில் காட்டுக்குள் இருந்து கேட்ட சத்தம்: தேடிச்சென்ற மின்சார வாரிய ஊழியர் கண்ட காட்சி!

Report
432Shares

கனடாவில் மின்சார வாரிய ஊழியர்கள் பராமரிப்பு வேலைக்காக வனப்பகுதி ஒன்றின் பக்கமாக செல்லும்போது யாரோ உதவி கோரி அழைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

New Brunswick பகுதிக்கருகில் உள்ள வனப்பகுதிக்கு ஹெலிகொப்டர் ஒன்றில் சென்ற மின் வாரிய ஊழியர்கள், ஒரு ஊழியரை அப்பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, பொருட்களை எடுத்து வருவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது யாரோ காட்டுக்குள்ளிருந்து உதவி கோரி அழைக்கும் மெல்லிய சத்தம் கேட்டுள்ளது அவருக்கு.

உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்ததோடு, தனது குழுவினரை உடனே வரச்சொல்லியிருக்கிறார் அந்த ஊழியர்.

பொலிசாரும், அவசர உதவிக்குழுவினரும் வரும் முன் அங்கு சென்ற மின் வாரிய ஊழியர்கள், அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, அவருக்கு முதலுதவியும் செய்துள்ளார்கள்.

அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்கிறார் பொலிஸ் அதிகாரியான Cpl. Kevin Plourde.

அந்த பகுதியில் ஹெலிகொப்டர் இறங்க முடியாது என்பதால் ஸ்ட்ரெச்சரில் வைத்தே 1.3 கிலோமீற்றர் தூரம் அந்த பெண்ணை தூக்கி சென்றிருக்கிறார்கள்.

பின்னர், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவர்.

அவரது பெயர் Jenny McLaughlin, New Brunswick பகுதியைச் சேர்ந்தவர். நடந்தது என்னவென்றால், ஜூலை மாதம் 17ஆம் திகதி அந்த பகுதிக்கு சென்ற Jenny McLaughlin வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.

சுமார் இரண்டு வாரங்கள் காட்டில் கிடைத்த பழங்களையும் தண்ணீரையும் குடித்து உயிர் வாழ்ந்த அவர், அவ்வப்போது கரடி முதலான விலங்குகளின் சத்தம் கேட்டு பயந்திருந்தாலும், வீட்டில் தனக்கு அன்பானவர்கள் தனக்காக காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் உயிருடன் வாழ தனக்கு பலம் தந்தது என்கிறார்.

மருத்துவமனையில் உடலில் ஏற்பட்ட கீறல்கள் முதலான காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டபின் வீடு திரும்பியுள்ளார் Jenny McLaughlin.

ஆனால், எதற்காக அந்த வனப்பகுதிக்கு சென்றார் என்பதைக் கூற Jenny McLaughlinம் பொலிசாரும் மறுத்துவிட்டனர்.

14675 total views