பெய்ரூட்டில் 145 பேர் உயிரைப் பறித்த ரசாயனம் கனடாவில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டதாம்!

Report

பெய்ரூட்டை சின்னாபின்னமாக்கி சுமார் 145 பேர் உயிரைப் பறித்துள்ள ரசாயனம், ஒரு காலத்தில் கனடாவில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டதாம்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சேமித்து வைக்கப்பட்டு, வெடித்துச் சிதறிய ரசாயனத்தின் பெயர் அமோனியம் நைட்ரேட்.

சில வருடங்களுக்கு முன்பு வரை அமோனியம் நைட்ரேட் கனடாவில் உரமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, ஆனால் தற்போது அதற்கு மாற்றாக வேறு ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அமோனியம் நைட்ரேட் கனடாவில் பயன்படுத்தப்படுவது இல்லை.

மனித்தோபா பல்கலைக்கழக அறிவியலாளரான Mario Tenuta, அமோனியம் நைட்ரேட் பயங்கரமாக வெடிக்கக்கூடிய ஒரு பொருள் என்கிறார்.

ஒரு காலத்தில் அமோனியம் நைட்ரேட் இரண்டு விடயங்களுக்காக பெருமளவில் பயன்படுத்தப்பட்டதாம், ஒன்று உரமாக, மற்றொன்று, சுரங்கம் தோண்டுவதற்கு வெடிமருந்தாக... அமோனியம் நைட்ரேட் வெப்பம் அல்லது சிறிய அளவு தீ ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படும்போது, வெடிக்கக்கூடிய வாயுக்களை உருவாக்கும் என்று கூறும் Mario, அந்த வாயுக்கள் பயங்கரமாக வெடிக்கக்கூடியவை என்கிறார்.

அதுதான் பெய்ரூட்டிலும் நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிறார் Mario.

தற்போது பெருமாலான கனேடியர்கள் அமோனியம் நைட்ரேட்டை உரமாக பயன்படுத்துவதில்லை என்பதால் கனேடியர்கள் அதைக் குறித்து கவலைப்படவேண்டியதில்லை என்கிறார் அவர்.

4945 total views