கனடாவில் கைதான மூன்று ஈழத்தமிழர்கள்: அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அபாயகர பொருள்

Report

கனடாவில் சட்டவிரோதமாக துப்பாக்கியை கொண்டு சென்ற மூன்று ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர்களை கைது செய்ததாக டர்ஹாம் பொலிசார் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார், ​​வின்செஸ்டர் வீதி மற்றும் விட்பி வாட்ஃபோர்ட் வீதிக்கிடையில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போதே இக் கைது இடம் பெற்றுள்ளது.

வாகனத்தை சோதனையிட்ட போது மதுபான போத்தல்கள் காணப்பட்டதையடுத்து, மேலதிக சோதனை நடத்தியதில், வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.

இதையடுத்து வாகனத்தை செலுத்திய ஒஷாவாவை சேர்ந்த (39), டொராண்டோவின் பிளாக்வெல் (29), டொராண்டோவின் போல்டர்ப்ரூக் டிரைவைச் சேர்ந்த (27) வயதுகளை உடைய இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமில்லாத துப்பாக்கியை வைத்திருந்தது, கொண்டு சென்றது, கவனக்குறைவாக வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்ப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

20206 total views