கனடாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட உள்ளவர் இவர்தான்!

Report

விரைவில் ஓய்வுபெறவுள்ள விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயஸ், கனடாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இவருடன் மேலும் எட்டு நாடுகளுக்கான தூதுவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

நைஜீரியாவுக்கான தூதுவராக சாதிக், சவூதி அரேபியாவுக்கான தூதுவராக அகமட் ஏ ஜவாட், நெதர்லாந்துக்கான தூதுவராக அருணி ரணராஜா, சுவீடனுக்கான தூதுவராக தர்ஷண பெரேரா, எகிப்துக்கான தூதுவராக , பத்மநாதன், போலந்துக்கான தூதுவராக சமரசிங்க, தாய்லாந்துக்கான தூதுவராக சமிந்த கொலன்னே, கட்டாருக்கான தூதுவராக மபாஸ் மொஹிதீன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உயர் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்த நாடாளுமன்றக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் பெயர்கள், அங்கீகரிக்கப்பட்ட பின்னர், நியமனங்கள் உறுதி செய்யப்படும்.

5452 total views