கனடாவில் சடுதியாக அதிகரிக்கும் மரணங்கள்! கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் பலி

Report

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 645பேர் பாதிக்கப்பட்டதோடு, 79பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 15ஆயிரத்து 754பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 265பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும், 52ஆயிரத்து 195பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 444பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 52ஆயிரத்து 294பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

5561 total views