கனடாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: மேலும் 69 பேர் பலி! அச்சத்தில் நாட்டு மக்கள்

Report

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 965பேர் பாதிக்கப்பட்டதோடு, 69பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 20ஆயிரத்து 719பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 334பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும், 52ஆயிரத்து 739பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 431பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 56ஆயிரத்து 646பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

3305 total views