கொரோனா 2ஆவது அலை: பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது!

Report

கொரோனா வைரஸ் பெருந் தொற்றின் இரண்டாவது தொற்றலை பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ள நிலையில், டாக்டர் போனி ஹென்றி, சுகாதார அமைச்சர் அட்ரியன் டிக்சுடன் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த இரண்டாவது எழுச்சி நம் சுகாதார பராமரிப்பு அமைப்பு, நம் பணியிடங்கள் மற்றும் நம் அனைவருக்கும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

‘உங்கள் தனிப்பட்ட முயற்சிகள் சிறியதாகவோ அல்லது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தவோ தோன்றினாலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் கூட்டு நன்மை குறிப்பிடத்தக்கதாகும். எங்களைப் பாதுகாக்க உதவும் வகையில் எங்கள் பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன.

நாங்கள் அனைவரும் அவற்றைப் பயன்படுத்தும்போது அவை சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொரு 13 நாட்களுக்கும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகின்றது’ என கூறினார்.

வன்கூவர் கடலோர மற்றும் ஃபிரேசர் ஹெல்த் பகுதிகள் தொடர்ந்து வைரசின் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருக்கின்றன. புதிய தொற்றுகளில் 90 சதவீதம் அங்கு பதிவாகியுள்ளன.

886 total views