கனடாவுக்குள் நுழைந்த வெளிநாடொன்றின் புதிய வீரியமுடைய கொரோனா தொற்று!

Report
137Shares

கனடாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸும் கனடாவுக்குள் நுழைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9,197.

128 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 16,707 ஆக உயர்ந்துள்ளது.

கனடாவின் பொது சுகாதார அலுவலரான Dr. Theresa Tam கூறும்போது, முதல் தென்னாப்பிரிக்க திடீர் மாற்றம் கொண்ட வைரஸ் ஆல்பர்ட்டாவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கனடாவில் 14 பேருக்கு பிரித்தானிய திடீர் மாற்றம் கொண்ட வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

5650 total views