கனடாவில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report
57Shares

கனடாவில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவின் லண்டன் நகரில் தான் இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு நடந்துள்ளது.

63 வயதான பெண்ணொருவர் சாலையில் நடந்து சென்ற போது அவர் மீது வாகனம் ஒன்று வேகமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த அப்பெண் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2904 total views