பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ‘பிரவுட் பாய்ஸ்’ குழுவை சேர்க்க பரீசிலணை!

Report
19Shares

‘பிரவுட் பாய்ஸ்’ குழுவை அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பது குறித்து அரசாங்கம் பரீசிலித்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் அவசரகால ஆயத்த அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பானது, வெள்ளை மேலாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கும் வலதுசாரி தீவிரவாதக் குழு என பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்த அமைப்பின் நிறுவனர் கனடியர் எனவும் பிரவுட் பாய்ஸ் உறுப்பினர்கள் அமெரிக்க கேபிடல் மீது தாக்குதலுக்கு வழிவகுத்தபோது கொடிய ஆயுதங்களுடன் கூடிய ஒரு குழுவில் சேர்ந்ததாகவும் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மத் சிங் கருத்து வெளியிட்டுள்ளதன் பின்னணியில் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் பில் பிளேர் கூறுகையில், ‘பிரவுட் பாய்ஸ் போன்ற குழுக்கள் கருத்தியல் ரீதியாக ஊக்கமளிக்கும் வன்முறை தீவிரவாதிகள் குறித்து நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். இந்த நடவடிக்கை கனடாவிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும். பிற தீவிரவாத அமைப்புகளான அல்கொய்தா, போகோ ஹராம், தலிபான் மற்றும் பிறருடன் இதையும் சேர்க்கும்.

பிரவுட் பாய்ஸ் போன்ற அமைப்புகளை வன்முறை தீவிரவாதிகள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள். அவர்கள் அனைவரும் வெறுக்கத்தக்கவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள்.

மத்திய அரசாங்காம் அவர்களைப் பற்றிய உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகின்றது. ஆதாரங்கள் கிடைக்கின்ற இடத்தில் எங்களிடம் உளவுத்துறை இருக்கிறது.

அந்த அமைப்புகளுடன் நாங்கள் சரியான முறையில் கையாள்வோம் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் செயற்படுகிறோம்’ என கூறினார்.

1615 total views