
ஒன்ராறியோ அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு குறித்து மேலதிக விபரங்கள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வரும்.
இந்த உத்தரவுக்கான “சட்ட அளவுருக்களை” இன்று இணையத்தில் வெளியிடுவதாகவும், இந்த நடவடிக்கை குறித்து மேலும் தெளிவுபடுத்துவதாகவும் மாகாண அரசாங்கம் கூறியுள்ளது.
நாளை மளிகை கடை, சுகாதார சேவையை அணுகுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற அத்தியாவசிய நோக்கங்களைத் தவிர, குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.