ரொறன்ரோவில் திறக்கப்பட்ட தடுப்பூசி கிளினிக்: 5 நாளில் முடப்படும் நிலை!

Report
93Shares

மெட்ரோ ரொறன்ரோ கொன்வென்ஷன் மையத்தில் நேற்று திறக்கப்பட்ட முன்னோடி கொரோனா தடுப்பூசி கிளினிக், தடுப்பூசி விநியோக பற்றாக்குறையால் வரும் வெள்ளிக்கிழமையுடன், இடைநிறுத்தப்படும் நிலை ஏற்படும் என்று ரொறன்ரோ தீயணைப்புத் துறைத் தலைவர் மத்யூ பெக் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 250 பேருக்கு தடுப்பூசிகளைப் போடும் வகையில் இந்த மையம் நேற்று திறக்கப்பட்டது.

எனினும், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் வெள்ளிக்கிழமையுடன், இந்த நிிலையத்தில் தடுப்பூசி போடுவது இடைநிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

வரும் 23ஆம் திகதிக்குப் பின்னர் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்தவர்களுக்கு, பிற்போடப்படும் என்று கூறப்படுகிறது.

4077 total views