
ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட், மேலதிக கொரோனா தடுப்பு மருந்தை வழங்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த வாரம் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
1 மில்லியன் பைசர் தடுப்பு மருந்தை தந்துதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.