கனடா முன்னெடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை: மீறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

Report
0Shares

புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க எல்லைகளில் கொரோனா ஸ்வாப் சோதனைகளை கனடா இன்று முதல் தொடங்குகிறது.

கனடாவின் Public Health Agency 117-க்கும் மேற்பட்ட அமெரிக்க - கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு on-site swab சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்தது.

கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட எதிர்மறை கொரோனா பிசிஆர் சோதனை முடிவுகளுக்கு விலக்கு அளித்து, அமெரிக்க நுழைவுத் துறைமுகத்தில் கொரோனா சோதனையை நிர்வகிப்பதாக கனடா அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கொரோனா சோதனைகள் PHAC அதிகாரிகள் மற்றும் கனேடிய செஞ்சிலுவை சங்க ஊழியர்களால் நிர்வகிக்கப்படவுள்ளது.

புதிய விதிகளின்படி, ஸ்வாப் சோதனையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். பின்னர் 10-ஆம் நாளில் இரண்டாவது சோதனை எடுக்க வேண்டும்.

கனேடிய அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி, எல்லையில் கொரோனா சோதனை விதிமுறைகளை மீறினால், அது தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாகும்.

அதற்கு தண்டனையாக ஒருவருக்கு 6 மாத சிறை அல்லது 750,000 டொலர் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

147 total views