இது கவர்ச்சி உலகம்: விமர்சனங்களுக்கு சமந்தா பதில்...

Report

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. நடிகை சமந்தா திருமணம் முடிந்த பிறகும் படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார். கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், விஜய் சேதுபதியிடம் சூப்பர் டீலக்ஸ், விஷாலுடன் இரும்பு திரை படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, சமீபத்தில் ஓரு பிகினி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை கண்டதும் ரசிகர்கள், திருமணமான ஒரு பெண் இப்படி உடல் முழுவதும் தெரியும்படியா உடை அணிவது என விமர்சனம் செய்தனர்.

இதர்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவை, நான் என்ன செய்யவேண்டும் என்ற விதியை நான் தான் முடிவே செய்வேன். சினிமா என்பது கவர்ச்சி உலகம். தேவையில்லாமல் கவர்ச்சியை திணிப்பது எனக்கு பிடிக்காது என தெரிவித்துள்ளார்.

1523 total views