கிழக்கு பல்கலைக்கழக்கின் தகவல் தொடர்பு பீடம் தற்காலிகமாக மூடல்..

Report
4Shares

திருகோணமலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு மற்றும் தொழில் கல்விப்பீடம் மறுதிகதி அறிவிக்கப்படாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பீடாதிபதி எஸ்.குமுதினி தேவி தெரிவித்துள்ளார்.

பீடத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் வகுப்புகளை பகிஷ்கரித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் மாணவர்கள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதன் காரணமாக பீடத்தை தற்காலிகமாக மூட தீர்மானித்ததாகவும் பீடாதிபதி கூறியுள்ளார்.

முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையான கல்வி நடவடிக்கைகளே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

2016-2017 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்வை கடந்த 5 ஆம் திகதி நடைபெறவிருந்தது.

மாணவர்களின் பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக அதுவும் மறுதிகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

201 total views