இவரை தெரியுமா? கண்டுபிடித்து தருமாறு கோரும் பொலிஸார்..

Report
288Shares

குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடை சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கண்டி வத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சந்தேக நபரை கைதுசெய்யவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கே.பி. சாகர ஸ்வர்ணமால் என்ற 24 வயதான இந்த நபர் வசித்து வந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். சந்தேக நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

நபர் குறித்த தகவல் அறிந்தால், 081-247 62022 மற்றும் 071 8591063 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

பிரதேசத்தில் நடைபெற்ற குற்றச் செயல் சம்பந்தமாக சீ.சீ.டி. ஒளிப்பதிவு காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலக்கம் 328/14 கும்புல்கெதர, யட்டிராவண வத்தேகம என்று சந்தேக நபரின் விலாசம் குறிப்பிடப்பட்டுள்ளது.

10193 total views