24 மணிநேரத்தில் நியுயோர்க் மருத்துவமனையில் 13 பேர் உயிரிழப்பு

Report

நியுயோர்க்கின் எல்ம்ஹேர்ஸ்ட் மருத்துவமனையில் கொரோனாவால் 24 மணிநேரத்தில் 13பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழமைக்கும் புதன் கிழமைக்கும் இடையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மரணங்களிற்கும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையின் அளவிற்கும் தொடர்புகாணப்படுகின்றது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனை நெருக்கடி நிலையில் உள்ளதுடன் பொது சுகாதார நடவடிக்கையை பொறுத்தவரை இதுவே எங்களது முக்கிய முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்காக மருத்துவமனையின் பணியாளர்கள் அனைத்தையும் செய்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் துரதிஸ்டவசமாக இந்த நோய் உயிர்களை அதிகளவில் காவுகொள்கின்றது குறிப்பாக முதியவர்களும் வேறுநோய் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தவர்களும் அதிகம் இறக்கின்றதாகவும் அதிகாரிகள் கவலைவெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிலர் அவசரசேவை பிரிவில் உயிரிழந்துள்ளதுடன், சிலர் வைரஸ் பரிசோதனைக்காக காத்திருந்தவேளை உயிரிழந்துள்ளதாகவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது

1888 total views