கனடாவில் கொரோனா தொற்று நாளொன்றுக்கான இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு!

Report

கனடாவில் நாளொன்றுக்கான கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் நான்காயிரத்து 109பேர் பாதிக்கப்பட்டதோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 213பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 9ஆயிரத்து 973பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 25ஆயிரத்து 934பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை ஒரு இலட்சத்து 84ஆயிரத்து 306பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 232பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

8269 total views