ஸ்மார்ட் கார்டில் காஜலின் போட்டோ! அதிர்ச்சியில் மக்கள்

Report
23Shares

ஸ்மார்ட் கார்டில் நடிகைகள் படம் ஏன் வந்தது? என சட்டப்பேரவையில் குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ் பொதுமக்கள் தங்கள் மொபைல் ஆப் மூலம் தவறாக புகைப்படத்தை பதிவேற்றியதே காரணம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பேப்பருடன் கூடிய ரேஷன் கார்டுக்கு பதில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னையில் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு படிப்படியாக அனுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது.

அதாவது குடும்பத்தலைவர் புகைப்படங்கள் மாறி வருவதாகவும், பெயர் மற்றும் முகவரியில் குளறுபடிகள் இருந்த வண்ணம் உள்ளன.

சேலம் அருகே பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விநாயகர் புகைப்படம், செருப்பு புகைப்படம் போன்றவை இடம்பெற்றன.

இந்நிலையில், இதுகுறித்து சட்டப்பேரவையில் குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காமராஜ், பொதுமக்கள் தங்கள் மொபைல் ஆப் மூலம் தவறாக புகைப்படத்தை பதிவேற்றியதே காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் 99% ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் பணி முடிக்கப்பட்டு விட்டது. 4 லட்சத்து 12 ஆயிரத்து 722 ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யும் பணி நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

1412 total views