76 வயது மகளுக்கு 97 வயது அம்மா கொடுத்த சர்ப்ரைஸ்

Report
210Shares

பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் தருணத்தில் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் அனுபவிக்கும் வலிகள் அதிகமாகவே இருக்கும். அதுவும் வயதான நேரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டால் தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்.

அப்படி இருக்க இந்தப் பாட்டிக்கு 76 வயதில் ஏதோ உடல்நலக் கோளாறு காரணமாக படுக்கையிலேயே சாப்பிடுவதும், உறங்குவதுமாக இருக்கிறார். வீட்டில் அவரைக் கவனித்துக் கொள்ள பிள்ளைகள், கணவர், பேரன், பேத்திகள் என பல உறவுகள் இருக்கலாம்.

ஆனால் உள் மனதில் அவரது மனம் நாடியிருந்தது அவரது அம்மாவின் வருகையை மட்டுமே. 76 வயதான தனக்கே உடல் உபாதைகள் இப்படிப்படுத்தி எடுக்கும் போது 97 வயதான தனது அம்மாவால் எப்படித் தன்னை வந்து காண முடியப் போகிறது? அம்மாவெல்லாம் இங்கே வரமாட்டார் என்ற ஏக்கத்தில் இருந்திருப்பார் போலும்...

ஆனால், சர்ப்ரைஸாக அவரது வயோதிக அம்மா தன் மகளைப் பார்க்க ஓடோடி வந்தே விட்டார் எனும் போது அம்மாவைக் கண்டதும் அவரது உணர்வு வெளிப்பாட்டைப் பாருங்கள்...

ம்மா... என்ற அவரது அழைப்பில் ஓராயிரம் அர்த்தங்கள்... உலக உயிர்கள் அனைத்துக்கும் அன்னையே முதல் உறவு. பிறகு தான் மற்றவர்களைப் பட்டியலிட முடியும்.

இந்த நெகிழ்வான வீடியோ முகநூலில் பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருந்தது. எத்தனை முறை பகிர்ந்தாலும் பகிரத் தகுதியான வீடியோ தான் இது!

9357 total views