உலகிலேயே விலையுயர்ந்த பீட்சா

Report
279Shares

இத்தாலி நகரத்தில் பிரபலமான சமையல் கலைஞர்கள் இணைந்து உலகிலேயே அதிக விலையுள்ள பீசா ஒன்றை தயாரித்துள்ளனர்.

லூயிஸ் 13 என்ற பீட்சா இந்திய நாணய மதிப்பில் ரூ. 77 லட்த்திற்கு விற்கப்படுகிறது. இது உலகிலேயே அதிக விலையில் விற்கப்படும் பீட்சா என்ற பெருமையை பெற்றுள்ளது.

இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு தயாரிக்கப்படும் இந்த பீசாவை வாங்கி உண்பவருக்கு இதனுடன், விலையுர்ந்த மதுபானமான ரெமி மார்ட்டின் வழங்கப்படுகிறது.

அதே போல் இந்த பீட்சாவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனை மற்றும் உணவு பொருட்கள் பிரான்சில் இருந்து பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் தனியார் உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகிலேயே அதிக விலையுள்ள உணவுகள் பற்றி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள லூயிஸ் 13 பீட்சா உலகிலேயே விலையுயர்ந்த பீட்சா என்ற பெருமையை பெற்றுள்ளது.

11481 total views