பரிசினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள்!!!

Report
14Shares

பரிசின் பழக்க வழக்கத்தினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பரிசின் மாவட்டக் காவற்துறை அதிகார மையத்தில் (préfecture de police) இருந்து, பிரித்தெடுக்கப்பட்ட 1800 புதிய அதிகாரிகளை, இன்று பரிசின் மாநகரசபையில், பரிசின் மாநகர முதல்வர் அன் இதால்கோ வரவேற்றுள்ளார்.

இவர்கள் பரிசில் அநாகரிகச் செயல்களிற்கு எதிராக (lutte contre les incivilités) களமிறக்கப்பட உள்ளனர். ஏற்கனவே உள்ளவர்களுடன் இவர்களும் இணைந்து , சிகரட் அடிக்கட்டைகளைக் கீழே எறிதல், சிறுநீர் கழித்தல், கண்டபடி குப்பைகளைப் போடல், மற்றும் இது போன்ற அநாகரிகச் செய்களிற்கு குற்றப்பணம் வசூலிப்பார்கள்.

இந்த 1800 பேரில் பெரும் பகுதி மேற்கண்ட பணிகளில் ஈடுபட மற்றவர்கள், கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை விநியோகப் பணியில் ஈடுபட உள்ளனர்.

1270 total views