வீதி கண்கானிப்பில் இருந்த பொலிஸாருக்கு மகிழுந்து ஒன்றால் நேர்ந்த கதி! பரிசில் சம்பவம்

Report

பரிசில் காவல்துறை அதிகாரி ஒருவர் மகிழுந்து ஒன்றில் சிக்கி 200 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் காவல்நிலையத்துக்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 02:40 மணிக்கு, தங்களது காவல்நிலையத்துக்கு முன்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், கறுப்பு நிற மகிழுந்து ஒன்றை நிறுத்த பணித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட வீதியினால் சென்றுகொண்டிருந்ததை அடுத்தே குறித்த மகிழுந்து மறிக்கப்பட்டது. முதலில் சாரதி மகிழுந்தை நிறுத்த முற்பட்டிருந்த போதும், பின்னர் தனது ஓட்டுனர் உரிமம் பறிக்கப்படும் என எண்ணி, மகிழுந்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதில் எதிர்பாரா நிகழ்வாக காவல்துறை அதிகாரி ஒருவர் மகிழுந்தில் சிக்குண்டு 200 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். Winston Churchill Avenue இல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

35 வயதுடைய காவல்துறை அதிகாரி பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 41 வயதுடைய சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் ஒட்டுனர் உரிமம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

1283 total views