Stains - சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report

நேற்று திங்கட்கிழமை இரவு, Stains இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச்சூடு, பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை இரவு, நள்ளிரவுக்கு சற்று பின்னர் Clos Saint-Lazare (Stains) இல் வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இரு ஆயுததாரிகள், மகிழுந்து ஒன்றில் இருந்த நபர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் இரு நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மூன்றாவது நபர் காலில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இருவரும் 22-28 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மகிழுந்து துப்பாக்கி குண்டுகளினால் சல்லடையாக்கப்பட்டிருந்தது. 15 குண்டுகள் பதித்த தடங்கள் காவல்துறையினரால் கணக்கிடப்பட்டுள்ளது.

20 வரையான துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றிருக்கலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரையும், மேலும் காயமடைந்த நபரையும் காவல்துறையினர் முன்னதாகவே நன்கு அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1244 total views