2018ஆம் ஆண்டை விட இவ்வருடம் பரிசில் உயிரிழப்பு 17.9% அதிகரிப்பு!

Report

ஓகஸ்ட் மாதத்தில் வீதி விபத்திக்களின் போது இடம்பெற்ற உயிரிழப்புக்கள் கணிசமாக உயர்வடைந்துள்ளன.

2018 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 17.9 வீத உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஓகஸ்ட் மாதத்தில் 290 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்தவருட ஓகஸ்ட் மாதத்தை விட 44 பேர் அதிகமாகும்.

அதேவேளை, இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை (ஓகஸ்ட் மாத இறுதி வரை) 2,133 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இது 35 உயிரிழப்புக்கள் அதிகமாகும்.

இவ்வருடத்தின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வீதி விபத்துக்களும் உயிரிழப்புக்களும் குறைவடைந்திருந்தன. ஜூன் ஜூலையில் பாரியளவில் மாற்றம் ஏற்படாத நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019 ஓகஸ்ட்டில் 4,314 பேர் வீதி விபத்தில் காயமடைந்திருந்தன. (2018 ஓகஸ்ட்டை விட 158 அதிகமாகும்)

இத்தகவல்கள் நேற்று திங்கட்கிழமை வீதி பாதுகாப்பு துறையினரால் வெளியிடப்பட்டிருந்தது.

296 total views