பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள காவல்துறை தொழிற்சங்கம்

Report

காவல்துறை அதிகாரிகளின் தொழிற்சங்கம் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

காவல்துறையினரின் தொடர் தற்கொலைகள், வேலை நிபந்தனைகள் என பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த பணி பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 2 ஆம் திகதி நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ள உள்ளனர். marche de la colère எனும் கோபத்தினை வெளிக்காட்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

Alliance, SGP, Synergie, unions of commissioners ஆகிய அமைப்புகள் தங்களது ஊழியர்களை (அதிகாரிகளை) ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.

நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் இவ்வருடத்தில் 48 அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், காவல்துறையினருக்கு ஊதிய உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

304 total views