பாரிஸில் போராட்டகாரர்களை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி விரட்டிய பொலிஸ்

Report

பிரான்ஸில் அரசாங்க எதிர்ப்பு ‘மஞ்சள் ஆடை’ ஆர்ப்பாட்டங்களின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டகாரர்களை விரட்ட பாரிஸ் பொலிசார் சனிக்கிழமை வடமேற்கு பாரிஸில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

தெற்கு பாரிஸில் உள்ள Gare d’Austerlitz-ஐ நோக்கி போராட்டக்காரர்கள் நகரமெங்கும் அணிவகுத்துச் செல்லத் தயாராகி வந்தபோது, ​​ Porte de Champerret அருகே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது.


அதே நேரத்தில் பாரிஸ் வளைய சாலையை ஆக்கிரமிக்க முயன்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் தலையிட்டு தடுத்துள்ளனர். இதன் போது சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் ஆடை ஆர்ப்பாட்டங்கள் என அழைக்கப்படுபவை முதலில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதிக வாழ்க்கைச் செலவு தொடர்பாக 2018 நவம்பர் நடுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால், பின்னர் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிரான பெரிய இயக்கமாக உருவெடுத்தது. அதுமட்டுமனி்றி பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவரது உந்துதலிலும் நாடு முழுவதும் பரவியது.

சமீபத்திய மாதங்களில் ஆர்ப்பாட்டங்கள் பலத்தை இழந்துள்ளன, பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களிடமிருந்து ஒரு சில ஆயிரம் வரை குறைந்தன.

ஆனால் அதன் தலைவர்கள் இந்த சனிக்கிழமையன்று மீண்டும் அணிதிரண்டு முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளனர். 2018 இந்த இயக்கத்தில் 3,00,000 மக்கள் வரை ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1062 total views