பிரான்ஸ் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்று பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்!

Report

நேற்று வெள்ளிக்கிழமை வீதி விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் பலியாகியுள்ளனர்.

Finistère நகரில் இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலின் போது D770 வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றது. 15, 18 மற்றும் 21 வயதுடைய மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இரு சகோதரகளும் ஒரு சகோதரியும் மொத்தம் மூவர் விபத்தில் சாவடைந்துள்ளனர். அவர்கள் பயணித்த மகிழுந்தை உயிரிழந்த 21 வயதுடைய நபரே செலுத்தியுள்ளார்.

அவர்கள் மூவரும் பண்ணை ஒன்றில் பன்றி குட்டிகளை வாங்கிக்கொண்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான மற்றைய வாகனத்தில் பயணித்த நான்கு பயணிகள் காயமடைந்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

2168 total views