பிரான்சு Rhône-Alpes நகரில் கடும் பனிப்பொழிவு! முதியவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்

Report

நேற்று சனிக்கிழமை காலையில் இருந்து 79,500 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் சிக்கியுள்ளன.

Rhône-Alpes நகரில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாக மர முறிவுகள் ஏற்பட்டதோடு மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது.

திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும், தொடர்ந்தும் பனிப்பொழிவு இடம்பெற்று வருவதால் மீட்புப்பணி மிக சவாலான விடயமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மவை Drôme, Ardèche மற்றும் Isère ஆகிய நகரங்களைச் சேர்ந்து 1,45,000 வீடுகள் மின்சார தடையை சந்தித்திருந்தது.

இன்று இரவுக்குள் 80 வீத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என அறிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதுவரை 79,500 வீடுகள் இருளில் சிக்கியுள்ளன.

தவிர, 72 வயதில் இருந்து 85 வயதுடைய எட்டு முதியவர்கள் மூச்சுத்திணறலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

1522 total views