11 வயது பாடசாலை மாணவி தற்கொலை! அசிரியர் மீது விசாரணை

Report

பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஆசிரியர் ஒருவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Val d'Oise நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் 11 வயதுடைய சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார். Herblay (Val d'Oise) நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று சனிக்கிழமை பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த மாணவியை துன்புறுத்தல் மேற்கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Evaëlle எனும் குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்பத்தினர் தரப்பில் எவ்வித காரானங்களும் சிக்காத போது, பாடசாலை தரப்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் பின்னரே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. தவிர, குறித்த ஆசிரியர் மீது சிறுமியின் பெற்றோர்களும் வழக்கு தொடுத்துள்ளனர்.

2080 total views