Rouen-Le Havre நகரில் தொடருந்து ஒன்றுடன் பசுமாடுகள் மோதி விபத்து!

Report

நேற்று சனிக்கிழமை காலை தொடருந்து ஒன்றுடன் பசுமாடுகள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rouen-Le Havre நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SNCF இற்கு சொந்தமான பராமரிப்பு தொடருந்து ஒன்றுடனேயே மாடுகள் மோதியுள்ளன.

அதிகாலை 4.34 மணிக்கு இந்த இங்குள்ள தொடருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட மாடுகள் தொடருந்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளன. பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மாடுகள் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளன.

உடனடியாக மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து தண்டவாளத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து TER மற்று. Intercity ஆகிய தொடருந்துகள் தடைப்பட்டன. தவிர Le Havre இல் இருந்து Marseille நோக்கி பயணிக்கும் TGV சேவைகள் இரத்தும் செய்யப்பட்டன.

1181 total views